ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

ஆரணி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-09-02 06:52 GMT   |   Update On 2021-09-02 06:52 GMT
ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் சுமார் 50ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவில் உள்ளது.

பல ஆண்டுகாளாக புனரைக்கபடாமல் இருந்த கோவிலை ஊர் பொதுமக்கள் ஓன்றுணைந்து புனரமைக்கும் பணியை செய்தனர். இதை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் நடந்தது.

முன்னதாக ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் கணபதி ஹேமம் லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் பூர்ணஷீத் தீபாரதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலையில் யாகசாலையில் வைத்து பூஜிக்கபட்ட கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை செல்வ விநாயகர் கோவில் மேற்கூரையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கபட்டன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News