செய்திகள்
பழங்கள் விலை உயர்வு

ஈரோட்டில் பழங்கள் விலை உயர்வு

Published On 2021-05-01 12:22 GMT   |   Update On 2021-05-01 12:22 GMT
ஈரோட்டில் வரத்து குறைவு காரணமாக பழங்கள் ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள தற்காலிக சந்தைக்கு பழங்கள் அனைத்தும் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பழங்கள் வரத்து தடைபட்டு உள்ளது. மேலும் மக்கள் வருகை குறைந்ததால் விற்பனையும் சரிந்து இருக்கிறது. இதனால் வியாபாரிகள் பழங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வியாபாரி ஒருவர் கூறினார்.

ஈரோட்டில் நேற்று முன்தினம் பழங்களின் சராசரி விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-

மாதுளை - ரூ.200

சாத்துக்குடி - ரூ.90

ஆப்பிள் - ரூ.200

ஆரஞ்சு - ரூ.120

திராட்சை - ரூ.110

கொய்யா - ரூ.50

மாம்பழம் - ரூ.100

இதுபோல் ஒரு கிலோ வெள்ளரி சராசரியாக ரூ.60-க்கு விற்பனையானது.

வரத்து குறைவு காரணமாக பழங்கள் ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News