செய்திகள்
மோகன் பகவத்

இந்துத்துவா அனைவரையும் ஒன்றிணைக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Published On 2021-09-28 21:40 GMT   |   Update On 2021-09-28 21:40 GMT
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்துத்துவாவின் சித்தாந்தமே அனைவரையும் சேர்த்து ஒன்றிணைப்பது எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மூன்று நாள் சுற்றுப் பயணமாக குஜராத் மாநிலம் சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் ‘‘இந்துத்துவா என்பது அனைவரையும் சேர்த்து, அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவரையும் தனக்குள் இணைத்து செழிக்க வைப்பது.

சில நேரங்களில் தடைகளை அகற்றும்போது மோதல்கள் எழுகின்றன. ஆனால் இந்துத்துவா மோதலைப் பற்றியது அல்ல. இதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், தடைகளை நீக்குவதற்கு அதிகாரம் தேவை  என்பதை உலகம் புரிந்துகொண்டிருக்கிறது. இதை இந்துக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் அதிகாரம் வாய்ந்தவர்களாக மாற வேண்டும், ஆனால் அத்தகைய அதிகாரம் ஒருபோதும் நேர்மையற்ற முறையில் பயன்படுத்தப்பட மாட்டாது. இது மதத்தை பாதுகாக்கும்போது உலகை ஒன்றிணைக்கும்’’ என்றார்.

Tags:    

Similar News