செய்திகள்
பிரியங்கா காந்தி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் - பிரதமர், உள்துறை மந்திரிக்கு பிரியங்கா காந்தி டுவிட்

Published On 2020-03-28 10:54 GMT   |   Update On 2020-03-28 10:54 GMT
ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர், உள்துறை மந்திரிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் போக்குவரத்து  வசதியின்றி டெல்லியில் சிக்கித் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர், உள்துறை மந்திரிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலம் உடனடியாக இந்தியா அழைத்து வருகிறீர்கள். ஆனால், போக்குவரத்து முடங்கியதால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமை உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

கொரோனா அச்சுறுத்தல், வேலையின்மை, பசி கொடுமை உள்ளிட்டவற்றால் அவர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்கின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News