செய்திகள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து

Published On 2020-11-07 21:36 GMT   |   Update On 2020-11-07 21:36 GMT
அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசின் புத்திசாலித்தனமான மற்றும் முதிர்ச்சியான தலைமையின் கீழ், உலகம் முழுவதும் அமைதியையும் வளர்ச்சியையும் உருவாக்கக் கூடிய ஒரு கூட்டாட்சியை இந்தியா எதிர்பார்க்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள். அவர் அமெரிக்காவை ஒன்றிணைத்து வலுவான பாதையைக் காட்டுவார் என்று நான் நம்புகிறேன் என தெரிவிதுள்ளார். 
Tags:    

Similar News