செய்திகள்
கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

கோத்தகிரியில் போலீசார் வாகன சோதனை

Published On 2019-11-27 18:19 GMT   |   Update On 2019-11-27 18:19 GMT
கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ‘பிரஸ்’ என்ற ஸ்டிக்கரை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். இதில் ஒருசிலர் போலி ஸ்டிக்கர் ஒட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அழிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தொடர்ந்து இந்த கண்காணிப்பு பணி நடைபெறும். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இது போன்ற ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டக்கூடாது. சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை தவிர ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் உடனடியாக அந்த ஸ்டிக்கரை அகற்றவேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
Tags:    

Similar News