செய்திகள்
மேற்கு வங்காளத்தில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்காளத்தில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2021-04-26 01:52 GMT   |   Update On 2021-04-26 01:58 GMT
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கொல்கத்தா:

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 27-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 22-ந்தேதி 6-ம் கட்ட தேர்தல் முடிந்தது. இதன் மூலம் மொத்தம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 

இதில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இன்று மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் முக கவசம் அணிந்தே வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



இன்றைய தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 268 பேர் களத்தில் உள்ளனர். இதில் 37 பேர் பெண்கள் ஆவர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 19 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் 8-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் சம்சேர்கஞ்ச், ஜாங்கிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.  

Tags:    

Similar News