உள்ளூர் செய்திகள்
ஈரோடு ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் திருமண உதவித்தொகை பெற வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.

ஊரக வளர்ச்சிதுறையினர் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம்

Published On 2022-01-11 11:34 GMT   |   Update On 2022-01-11 11:34 GMT
ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.

 புதியதிட்டங்கள், வளர்ச்சிப்பணிகள், பிறதுறை சார்ந்த பணிகளுக்கு தனிஅலுவலர்களை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.

இதன் காரணமாக ஈரோடு கலெக்டர்அலுவலகத்தில் உள்ள ஊரகவளர்ச்சிமுகமை திட்டஅலுவலகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சிஒன்றியஅலுவலகங்களில் ஊழியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதன் காரணமாக கிராமப்பகுதியில் உள்ள குடிநீர்பணிகள், துப்புரவுபணிகள், வளர்ச்சித்திட்டப்பணிகள், 100 நாள் வேலைவாய்ப்புதிட்டம் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறைஅலுவலர் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் பாஸ்கர் பாபு கூறும்போது:-

எங்களின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தற்செயல் விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 

இனியும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் பிப்ரவரி மாதம் 2, 3-ந் தேதிகளில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார். 

இந்நிலையில் திருமண உதவிதொகை பெறுவதற்காக ஊராட்சி ஒன்றியஅலுவலகத்துக்கு வந்த பெண்கள் ஊழியர்களின் விடுப்புபோராட்டத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.

Tags:    

Similar News