செய்திகள்
சென்னை ஐகோர்ட்

புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமை பூமியாக மாறுகிறது -சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

Published On 2020-10-01 08:07 GMT   |   Update On 2020-10-01 08:07 GMT
இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சென்னை

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது திருப்பூர் அருகே அருகே அசாம் மாநில பெண் தொழிலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-

புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமை புமியாக மாறி வருவது துரதிர்ஷ்டவசமானது. 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. 

இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடு, உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.

அசாம் மாநில பெண் தொழிலாளர் திருப்பூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News