ஆன்மிகம்
வலம்புரிச் சங்கு

சக்தி மிகுந்த வலம்புரிச் சங்கு

Published On 2019-11-19 06:17 GMT   |   Update On 2019-11-19 06:17 GMT
வெண்சங்கு எனப்படும் வலம்புரிச் சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. மேலே சொன்ன இந்த சங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இடம்பெற்றிருப்பதாக விகானாச ஆகம விதியில் கூறப்பட்டுள்ளது.

வெங்கடாஜலபதிக்கு மணி சங்கும், ரங்கநாதருக்கு துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு பாருதசங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு பார் சங்கும், சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலியபெருமாளுக்கு வெண் சங்கும், ஸ்ரீநாராயணமூர்த்திக்கு பூமா சங்கும் உள்ளன.

இவற்றில் வெண்சங்கு எனப்படும் வலம்புரிச் சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.
Tags:    

Similar News