செய்திகள்
ராமநாதபுரத்தில் கலெக்டர் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்து ஆய்வு நடத்தியபோது எடுத்தபடம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்க திருத்த பணிகளை தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆய்வு

Published On 2021-01-01 14:42 GMT   |   Update On 2021-01-01 14:42 GMT
ராமநாதபுரத்தில் தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ராமநாதபுரம்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் 1.1.2021-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் மேற்கொள்வதற்கு 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1369 பாகங்களில் 5, 68, 014 ஆண் வாக்காளர்களும் 5, 70,306 பெண் வாக்காளர்களும் 63 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11, 38, 383 வாக்காளர்கள் இருந்தனர்.

இதனையடுத்து, 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்வ தற்கும், பெயர் நீக்கம் செய்வதற்கும் பொதுமக்களிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டு வாக்காளர் சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நான்கு தினங்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், 16.11.2020-க்கு பிறகு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 28, 491 நபர்கள் படிவம்-6ம், பெயர் நீக்கம் செய்வதற்கு 10, 688 நபர்கள் படிவம்-7ம், பெயர் மாற்றம், திருத்தம் செய்வதற்கு 4, 941 நபர்கள் படிவம்-8 ம், பாகம் மாற்றம், சட்டமன்றத் தொகுதி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்வதற்கு 2, 181 நபர்கள் படிவம்-8ஏ என மொத்தம் 46,301 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்டுள்ள படிவங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆணையர் ஆபிரகாம், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆணையர், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ஆகியோர், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், ஆனந்தூர் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று, வாக்காளர் சுருக்கத் திருத்தப் பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், அது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கள ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல் உட்பட உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News