லைஃப்ஸ்டைல்
பெண்களின் அன்னம் போன்ற நடை.. ஆரோக்கியத்திலோ குறை..

பெண்களின் அன்னம் போன்ற நடை.. ஆரோக்கியத்திலோ குறை..

Published On 2020-08-27 08:10 GMT   |   Update On 2020-08-27 08:10 GMT
அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.
கால் பாதங்கள்.. இவை மனித உடலில் அற்புதமான படைப்பு. அந்த பாதங்களை பாதுகாக்க எல்லோரும் செருப்பு அணிகிறார்கள். ஆனால் சரியான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்து, சிறிது தூரம் நடப்பதுகூட பாதங்களின் ஆரோக்கியத்தை பலமாக பாதிக்கும். இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதிலும் ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள்.

ஹை ஹீல்ஸ் செருப்பின் அழகும், வடிவமைப்பும் பெண்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. இவ்வகை செருப்புகள், தங்களுக்கு கம்பீஇரத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக நம்புகிறார்கள். தங்களை குட்டையாக கருதிக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாக கருதுவதும் ஒரு காரணம். இப்படிப்பட்ட எண்ணங்களால் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனோடு சேர்ந்து பாதங்களில் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன.

வெகுகாலமாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பாதங்களுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதையும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்கவேண்டும்.

குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான், கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும். குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களில் லைனிங் செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல், இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈஇரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

அதிக உயரமான ஹீல்ஸ் செருப்புகளை தவிர்த்திடுங்கள். 2 அங்குல உயரம் கொண்ட செருப்புகளே பாதுகாப்பானவை. செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி இருக்க வேண்டும். குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும்படி இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது. குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். அதிகாலையில் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும்.

அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.
Tags:    

Similar News