செய்திகள்
பி.சி.பட்டீல்

நமது கலாசாரத்தில் விலங்குகளை, மனிதர்களுடன் ஒப்பிடுவது இல்லை: மந்திரி பி.சி.பட்டீல்

Published On 2020-11-03 02:06 GMT   |   Update On 2020-11-03 02:06 GMT
மனிதர்களை அரசியல் ரீதியாக சமாதி செய்கிறோம் என்று கூறுவது, நாயுடன் ஒப்பிடுவது சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு நல்லதல்ல என்று மந்திரி பி.சி.பட்டீல் பதிலடி கொடுத்துள்ளார்.
ஹாவேரி :

விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றதால் தான், சித்தராமையா எதிர்க்கட்சி தலைவராக ஆக முடிந்தது. கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் சித்தராமையா வாடகை வீட்டில் தான் வசித்திருக்க வேண்டும். பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலை காட்டுவாசி என்று சித்தராமையா கூறியிருக்கிறார். இது சரியல்ல. நமது கலாசாரத்தில் விலங்குகளுடன் மனிதர்களை ஒப்பீடு செய்வது என்பது இல்லை. தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடுமோ என்ற பயம் சித்தராமையாவுக்கு உள்ளது.

மனிதர்களை அரசியல் ரீதியாக சமாதி செய்கிறோம் என்று கூறுவது, நாயுடன் ஒப்பிடுவது சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு நல்லதல்ல. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 17 பேரும் அரசியல் ரீதியாக சமாதி ஆகிவிடுவார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் உண்மையிலேயே சமாதி ஆவது யார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.
Tags:    

Similar News