செய்திகள்
பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு

Published On 2021-07-17 09:24 GMT   |   Update On 2021-07-17 09:24 GMT
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட சரத்பவாருக்கு திட்டமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது.
புதுடெல்லி:

மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் பா. ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அவரை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீப காலங்களில் சந்தித்து பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து சரத்பவார் எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தி இருந்தார்.



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு களம் இறக்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

அதேநேரத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட சரத்பவாருக்கு திட்டமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



Tags:    

Similar News