செய்திகள்
தினேஷ் கார்த்திக்

விஜய் ஹசாரே டிராபி: அபிநவ் முகுந்த், பாபா அபரஜித், தினேஷ் கார்த்திக் ஆட்டத்தால் தமிழ்நாடு வெற்றி

Published On 2019-09-24 14:12 GMT   |   Update On 2019-09-24 14:12 GMT
விஜய் ஹசாரே டிராபியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடக்க போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது தமிழ்நாடு.
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய 50 ஓவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று தொடங்கியது. முதல்நாளில் பல்வேறு இடங்களில் போட்டிகள் நடைபெற்றது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் சேர்த்தது. பின்னர் 262 ரன்கள் அடித்தால் என்ற இலக்குடன் தமிழ்நாடு அணியின் என் ஜெகதீசன், அபிநவ் முகுந்து ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜெகதீசன் 7 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து அபிநவ் முகுந்த் உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபிநவ் முகுந்த் 75 ரன்னிலும், பாபா அபரஜித் 52 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 52 ரன்களும், ஷாருக் கான் 39 பந்தில் 48 ரன்களும் சேர்க்க  தமிழ்நாடு அணி 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News