செய்திகள்
தேமுதிக வட சென்னை மாவட்ட செயலாளர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

தேமுதிக மாவட்ட செயலாளர் திமுக-வில் இணைந்தார்

Published On 2020-12-17 02:18 GMT   |   Update On 2020-12-17 02:18 GMT
தேமுதிக வட சென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
சென்னை:

தே.மு.தி.க. வட சென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தா.இளைய அருணா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தே.மு.தி.க. வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ப.மதிவாணன் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News