செய்திகள்
தீ விபத்தில் உயிரிழந்த வீரர்கள்

தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Published On 2020-11-14 08:57 GMT   |   Update On 2020-11-14 09:40 GMT
மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

மதுரை  தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். கல்யாணகுமார், சின்ன கருப்பு ஆகிய வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுரை, ஜவுளிக்கடை  தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்; அனுதாபங்கள்.

வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News