ஆன்மிகம்
மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

5 மாதங்களுக்கு பிறகு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

Published On 2020-09-05 03:31 GMT   |   Update On 2020-09-05 03:31 GMT
மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாடுகள் நடந்து வருகிறது. மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கைகளில் சானிடைசர் (கிருமிநாசினி) தெளிக்கப்பட்ட பின்னரே மசூதிகளின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News