செய்திகள்
ரவிஸ் கிச்சன்

இந்திய ஓட்டலில் இந்தியருக்கு உணவு மறுப்பு.. அபராதம் விதித்த நீதிமன்றம்..

Published On 2019-08-22 09:05 GMT   |   Update On 2019-08-22 09:05 GMT
அயர்லாந்தில் உள்ள பிரபல இந்திய ஓட்டலில் சாப்பிட வந்த இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டப்ளின்:

அயர்லாந்தில் டர்பன் பகுதியில் ரவிஸ் கிச்சன் எனும் இந்திய ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் அப்பகுதியில் இந்திய உணவுக்கு புகழ்பெற்றது. இந்த ஓட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மையங் பட்நாகர் என்பவர் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது இவர்கள் அமர்ந்திருந்த டேபுளுக்கு அங்கு பணிபுரிபவர்கள் யாரும், எதுவும் கேட்கவில்லை. நீண்டநேரமாக யாரும் கண்டுக் கொள்ளாததால் அருகில் இருந்த பெண் சர்வரிடம்  ஏன் எங்களிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லை என மையங் பட்நாகர் கேட்டார்.



அதற்கு அந்த பெண் சர்வர், ‘நீங்கள் இந்தியர்கள் உங்களுக்கு உணவு கொடுப்பது இல்லை’ என கூறினார். இதனை கேட்டு கடுப்பான மையங், பின்னர் ஓட்டலில் இருந்து வெளியேறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி, உணவு கொடுக்காத அந்த ஓட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.2,39,553) அபராதம் எனவும், இந்த  அபராத தொகையை மையங் பட்நாகருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News