செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை வழியனுப்பி வைத்த நிஹாங் அமைப்பினர்

தலித் சீக்கியர் கொலையில் மேலும் 2 பேர் சிக்கினர்- மாலை மரியாதையுடன் அனுப்பி வைத்த நிஹாங் அமைப்பினர்

Published On 2021-10-16 17:19 GMT   |   Update On 2021-10-16 17:19 GMT
சிங்கு எல்லைப்பகுதியில் நடந்த கொலை தொடர்பாக நிஹாங் சீக்கிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு பகுதியில், லக்பீர் சிங் (வயது 35) என்ற தலித் சீக்கியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைக்கு நிஹாங் சீக்கிய குழு பொறுப்பேற்றுள்ளது. சீக்கிய மதத்தின் புனித நூலை அவமதித்ததால் கொன்றதாக தெரிவித்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக நிஹாங் அமைப்பைச் சேர்ந்த சரவ்ஜித் சிங் என்பவர் நேற்று மாலை போலீசில் சரண் அடைந்தார். இன்று நிஹாங் அமைப்பைச் சேர்ந்த மற்றொருவர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


அதன்பின்னர், இன்று மாலையில் நிஹாங் அமைப்பைச் சேர்ந்த மேலும்  2 பேரை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் நிஹாங் அமைப்பின் சக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதையுடன் அனுப்பி வைத்தனர். மூத்த உறுப்பினர் ஒருவர், அவர்கள் இருவரின் காலைத் தொட்டு வணங்கி விடை கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News