செய்திகள்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

Published On 2021-06-11 09:46 GMT   |   Update On 2021-06-11 09:46 GMT
சசிகலாவை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என கட்சி தலைமையே முடிவு செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.

வாணியம்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தன் பணியை தொடங்கி உள்ளார் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகைதந்து அல்லது தொடர்பு கொண்டோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சரை மீண்டும் கட்சியில் சேர்க்க தலைமை தான் முடிவு செய்யும்.

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பே இல்லை

அ.தி.மு.க. தொண்டர்களுடன் பேசுவதாக சசிகலாவின் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது,


அது முழுவதும் பொய்யான செய்தி, எந்த நிலையிலும் உண்மையான செய்தி அல்ல.

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார். சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என கட்சி தலைமையே முடிவு செய்துவிட்டது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கட்சியில் எந்த சலசலப்புக்கும் இடமில்லை. எப்போதும் இது அ.தி.மு.க.வின் கோட்டையாக தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News