செய்திகள்
கோப்புபடம்

காலாவதி இனிப்புகளை விற்றால் கடும் நடவடிக்கை-அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2021-11-03 08:13 GMT   |   Update On 2021-11-03 09:00 GMT
மிக குறுகிய காலத்தில் கெட்டுப்போகக் கூடிய பட்டர் ஸ்காட்ச், குல்கந்து, ரோஸ் குல்கந்து போன்ற பல இனிப்புகளை பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
உடுமலை:

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் சில்லறையாக விற்கப்படும் இனிப்புகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. சில்லறையாக விற்கப்படும் இனிப்புகளுக்கும் காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் உடுமலை நகரில் தீபாவளி பண்டிகையொட்டி அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான இனிப்புக்கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனால் மிக குறுகிய காலத்தில் கெட்டுப்போகக் கூடிய பட்டர் ஸ்காட்ச், குல்கந்து, ரோஸ் குல்கந்து போன்ற பல இனிப்புகளை பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களும் பாதிக்கின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு இனிப்பு வகையின் விலைக்கு அருகில் காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். ரசகுல்லா, ரசமலாஸ் போன்ற பால் பொருட்கள், பெங்காலி இனிப்புகளை, குளிர்சாதனப் பெட்டியில் 1 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும்.

அதேபோல் நடுத்தர கால அளவு கொண்ட லட்டு போன்ற இனிப்புகளை 4 நாட்களும், நீண்ட கால அளவு கொண்ட நெய் மற்றும் உலர்ந்த பழங்கள் கலந்த இனிப்புகளை 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

தவிர தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய், நெய் அல்லது வனஸ்பதி ஆகிய விபரங்களையும் கடைக்காரர்கள் தெரிவிக்க வேண்டும். விதிகளை மீறும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
Tags:    

Similar News