செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகள் நிலக்கடலைகளை இருப்பு வைத்து பயனடையலாம்

Published On 2021-09-14 05:52 GMT   |   Update On 2021-09-14 05:52 GMT
விவசாயிகள் எவ்வளவு மூட்டை நிலக்கடலை எடுத்து வந்தாலும் அவற்றை இருப்பு வைத்து விற்க முடியும்.
அவிநாசி;
 
அவிநாசி, சேவூர், நம்பியூர், சத்தி, புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ள நிலையில் சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கட்கிழமை தோறும் ஏலம் நடக்கிறது. 

அங்கு நிலக்கடலையை இருப்பு வைக்க தலா 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 குடோன்கள் அடுத்தடுத்து உள்ளன. மொத்தம் 2,250 மெட்ரிக் டன் கொள்ளளவில் 70 சதவீதம் அளவுக்கு நிலக்கடலை மூட்டை இருப்பு வைக்கலாம்.  

இவை தவிர 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் காலியாக உள்ளது. இதனால் விவசாயிகள் எவ்வளவு மூட்டை நிலக்கடலை எடுத்து வந்தாலும் அவற்றை இருப்பு வைத்து விற்க முடியும். 

ஏலத்தில் ஏற்கனவே உள்ள வியாபாரிகள் மட்டுமின்றி சங்க விதிப்படி புதிய வியாபாரிகளும் பங்கேற்று ஏலம் எடுக்கலாம் என்றனர்.
Tags:    

Similar News