செய்திகள்
மிக்கி ஆர்தர்

ஒப்பந்தத்தை நீட்டிக்காதது ஏமாற்றத்துடன் வலியை ஏற்படுத்தியுள்ளது: பாகிஸ்தான் தலைமை கோச் மிக்கி ஆர்தர்

Published On 2019-08-07 11:07 GMT   |   Update On 2019-08-07 16:13 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைமை பயிற்சியாளரின் ஒப்பந்தத்தை நீட்டிக்காதது ஏமாற்றத்துடன் வலியை ஏற்படுத்தியுள்ளது என்று மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் மிக்கி ஆர்தர். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியதால் அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு ஏமாற்றத்துடன் வழியை ஏற்படுத்தியுள்ளது என்று மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் இந்த முடிவு எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மேலும், மிகவும் காயப்படுத்தியுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக் காலத்தில் என்னுடைய ஒட்டுமொத்த இதயமும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை முன்னணி நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றே நினைத்தது. அந்த வகையில்தான் வேலைப்பார்த்தேன்’’ என்றார்.

மிக்கி ஆர்தருடன் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர், பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் மெஹ்மூத் ஆகியோரின் பதவிக் காலத்தையும் நீட்டிக்கவில்லை.
Tags:    

Similar News