ஆட்டோமொபைல்
டாடா நெக்சான்

டாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-12-02 10:52 GMT   |   Update On 2019-12-02 10:52 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இ.வி. கார் மும்பையில் டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. நெக்சான் இ.வி. காருக்கான புதிய டீசர்களை டாடா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் நெக்சான் இ.வி. கார் ஃபேஸ்லிஃப்ட் நெக்சான் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என இதுவரை வெளியான டீசர்களில் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த கார் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.



அதன்படி நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொனெட் மற்றும் முன்புற பம்ப்பர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள், மெல்லிய கிரில், டி.ஆர்.எல்.கள் கொண்ட ஹெட்லைட் யூனிட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் கார் அக்டோபர் 2020 முதல் அமலாக இருக்கும் புதிய பாதசாரி பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.

புதிய காரில் அலாய் வீல் வடிவமைப்புகள், பின்புற ஸ்டைலிங் போன்றவை தற்சமயம் விற்பனையாகும் காரை விட வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்சான் இ.வி. கார் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையகங்களில் எதிர்பார்க்கலாம்.

இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய அளவு திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News