செய்திகள்
கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு

கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு

Published On 2020-09-15 02:03 GMT   |   Update On 2020-09-15 02:03 GMT
கீழடியில் நேற்று புதிய குழி தோண்டும் பணியின்போது 2 உறைகள் கொண்ட கிணறு இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மத்திய-மாநில அரசுகள் சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. இதில் பானைகள், செங்கல் கட்டிட சுவர், விலங்கு எலும்புக்கூடு, எடைக் கற்கள், முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடு, மனித முழு உருவ எலும்புக்கூடு, குழந்தைகள் முழு உருவ எலும்புக்கூடுகள், தங்க நாணயம், சங்கு வளையல்கள், சுடுமண் உலை, சிறிய, பெரிய எலும்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அகரத்தில் 13 அடுக்கு கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அகரம், மணலூர் ஆகிய இரு பகுதிகளும் மக்கள் வசிப்பிட பகுதிகளாக இருந்துள்ளது என தொல்லியல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கீழடியில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி எனவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் கீழடியில் நேற்று புதிய குழி தோண்டி பணி நடந்தபோது முதலில் வட்டமாக ஒரு இடத்தில் தெரிந்தது. தொடர்ந்து அந்த இடத்தில் மண்ணை அகற்றியபோது 2 உறைகள் கொண்ட கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆழமாக தோண்டும்போது கூடுதலாக உறைகள் தென்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News