உள்ளூர் செய்திகள்
ஆக்சிஜன் குடோனில் மன்சுக் மாண்டவியா ஆய்வு

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மத்திய மந்திரி மாண்டவியா இன்று ஆய்வு

Published On 2022-01-12 08:52 GMT   |   Update On 2022-01-12 10:49 GMT
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மன்சூப் மாண்டவியா இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை:

தமிழகத்தில் இன்று மாலை புதிய மருத்துவ கல்லூரி தொடக்கவிழா நடைபெறுகிறது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இதை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காலை சென்னை வந்தார்.

சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.

முன்னதாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்எஸ். வளாகத்துக்கு நேரில் சென்றும் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஆக்சிஜன் குடோனில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களையும் அவர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியையும் ஆய்வு செய்த அவர் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தையும் சென்று பார்த்தார்.

இதையும் படியுங்கள்... ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்- அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

Tags:    

Similar News