ஆட்டோமொபைல்
டாடா நெக்சான் இவி

டாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது

Published On 2020-05-30 10:07 GMT   |   Update On 2020-05-30 10:07 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி கார் விநியோகம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது.



கொரோனா வைரஸ் ஊரடங்கில் நாடு முழுக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டாடா நெக்சான் இவி மாடல் விநியோகம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது. அதன்படி புதிய காம்பேக்ட் எஸ்யுவி விநியோகம் தற்சமயம் பெங்களூரு, சென்னை மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெக்சான் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு தழுவிய ஊரடங்கு துவங்கும் முன் இந்த காரின் முதற்கட்ட விநியோகம் துவங்கியது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.



இந்தியாவில் நெக்சான் இவி இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.99 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிமுகமான போது இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி என்ற பெருமையை டாடா நெக்சான் இவி பெற்றது. நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
Tags:    

Similar News