லைஃப்ஸ்டைல்
சுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்

சுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்

Published On 2020-06-05 03:20 GMT   |   Update On 2020-06-05 03:20 GMT
குடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள்.
குட்டீஸ், தாத்தா, பாட்டி இருக்கறவங்க வீட்டுல ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு முடிச்சதுக்கு அப்புறமா அவர்களிடம் நீங்க கதை கேட்பீங்க இல்லையா..? டி.வியில வர்ற கார்ட்டுன் கதைகளை விடவும் தாத்தா, பாட்டி சொல்லும் பல கதைகள் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். அவங்க சொல்ற கதையை வீட்டுல இருக்கிற குட்டி பசங்கள் ஆர்வமா கேட்டுக்குவாங்க. அந்த கதைகளில் வரும் ஆச்சரியமான ஹீரோ, வில்லன் பத்தியெல்லாம் அவங்க கேட்டுட்டு அதை அப்படியே நண்பர்களிடம் சொல்லி அவங்களை ஆச்சரியப்படுத்தறதும் உண்டு.

கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்த நிலையை குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் சொல்லி புரிய வைப்பார்கள் இல்லையா..? கதைகள் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும். அதன் மூலம் ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்கங்களை குழந்தைகள் கடைப்பிடிப்பார்கள். வீட்டுல இருக்கும் தாத்தா, பாட்டிகள் அவங்க பேரக்குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அதனால, அம்மா, அப்பா வேலைக்கு போற வீடுகளில் உள்ள குட்டி குழந்தைகள் தனியாக இருக்கும் உணர்வு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பாங்க.

குடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள். வேலைக்கு போகும் அம்மா, அப்பா சந்திக்கும் சிரமங்களை எல்லாம் குட்டீஸ்கள் அவர்கள் அளவிற்கு புரிந்து கொள்வார்கள். அதனால, மரியாதை, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்கள் அவங்களுக்கு வரும் இல்லையா..?

வீட்டில் தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் விளையாடும்போது எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு வரக்கூடிய சிக்கல்களை எப்படி சரி செய்வது என்றும் யோசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் பாசம் காரணமாக சின்ன குழந்தைகளுக்கு தனிமை உணர்ச்சி, பயம், சோர்வு போன்ற பாதிப்புகள் வருவதில்லை என்றும் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால, வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு நீங்களும் மரியாதை கொடுக்கணும் குட்டீஸ்..என்ன சரியா..? 
Tags:    

Similar News