செய்திகள்
கோப்புப்படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாத 443 பேர் மீது வழக்கு

Published On 2020-07-29 10:40 GMT   |   Update On 2020-07-29 10:40 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 373 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 70 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அதிக வேகத்தில் சென்ற 8 பேர்மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 20 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றி சென்ற 8 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 373 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 70 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிச்சென்ற 40 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 31 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 155 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News