தொழில்நுட்பம்
டிராய்

94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல், வோடபோன்

Published On 2020-08-27 08:34 GMT   |   Update On 2020-08-27 08:34 GMT
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.


பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மே மாதத்தில் 56.11 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருக்கின்றன. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 36.577 லட்சம் வாடிக்கையாளற்களை சேர்த்து இருக்கிறது.

ஜியோ மட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனமும் சுமார் 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. மே மாத இறுதி வரை டெலிகாம் சந்தையில் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணித்தை 114.952 கோடிகளில் இருந்து 114.391 கோடிகளாக சரிந்துள்ளது என மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்து உள்ளது.



டிராய் அறிக்கையின் படி பாரதி ஏர்டெல் நிறுவனம் 47.428 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 47.263 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அந்த வகையில் இரு நிறுவனங்களும் கூட்டாக சுமார் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. 

இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். ஏப்ரலில் இரு நிறுவனங்களும் கூட்டாக 75 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருந்தன. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியது முதல் முன்னணி நிறுவனங்கள் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. 
Tags:    

Similar News