செய்திகள்
தென்காசியில் வாக்காளர் ஒருவருக்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கிய போது எடுத்த படம்.

தென்காசியில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் - கலெக்டர் சமீரன் ஆய்வு

Published On 2020-11-22 13:20 GMT   |   Update On 2020-11-22 13:20 GMT
தென்காசியில் நேற்று நடந்த வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்தம் சிறப்பு முகாமை, கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
தென்காசி:

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி இந்த மாதம் 21, 22 மற்றும் டிசம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

கடந்த 14-2-2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 3 ஆயிரத்து 308 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 40 ஆயிரத்து 488-ம், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 62 ஆயிரத்து 764-ம், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 56 பேரும் உள்ளனர். அதன்பின் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 31-10-2020 முடிய 3 ஆயிரத்து 438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 15 ஆயிரத்து 65 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மேற்கண்டவாறு சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யப்பட்ட பின் மொத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 91 ஆயிரத்து 681 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 34 ஆயிரத்து 450-ம், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 57 ஆயிரத்து 191-ம், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 40 பேரும் உள்ளனர்.

தென்காசி மஞ்சம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார்.

வருகிற 1-1-2021-ஐ தகுதி நாளாக கொண்டு மேற்படி தேதியன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களும், விடுபட்ட வாக்காளர்களும், தங்களது பெயர்களை சேர்க்க படிவம் 6-ம், நீக்கம் செய்ய படிவம் 7-ம், திருத்தம் செய்ய படிவம் 8-ம், ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்ய படிவம் 8ஏ-ஐயும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News