லைஃப்ஸ்டைல்
பாங்க்ரா உடற்பயிற்சி

விரைவில் உடல் எடையை குறைக்கும் பாங்க்ரா உடற்பயிற்சி

Published On 2021-10-30 04:18 GMT   |   Update On 2021-10-30 04:18 GMT
இசையை உணர்ந்து அதற்கேற்ப பாங்க்ரா நடன அசைவுகளை மேற்கொள்ளும் போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து எடை குறையும்.
நான்கு சுவர்களுக்குள் டம்பிள்ஸ் தூக்கியும், ட்ரெட்மில்லில் ஓடியும் மேற்கொள்ளும் வழக்கமான ஜிம் உடற்பயிற்சிகள் சலிப்பை தருகிறதா? கவலை வேண்டாம்.

இரு கைகளை உயர்த்தி பலே பலே போன்று நடனமாடும் பஞ்சாப் மாநிலத்தவரின் பாங்க்ரா நடனக்கலையிலிருந்து உருவாகியுள்ளது புதுமையான உடற்பயிற்சி.

பாங்க்ரா என்பது பலருக்கும் பிடித்தமான நடன முறையாகும். பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் காட்டப்படும் விரிவான சித்தரிப்பால் பலே பலே என்ற துள்ளல் இசை கேட்டாலே அனிச்சையாக கைகள் பாங்க்ராவின் அடையாளமான நடன அசைவினை செய்யத்தொடங்கிவிடும்.

மனதுக்கு ஆனந்தத்தையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது பாங்க்ரா முக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. பாங்க்ராவை நடனமாக மட்டுமின்றி உடற்பயிற்சியாகவும் மேற்கொண்டு பயனடையலாம்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிட்னஸ் பயிற்சியாளர் சரின் ஜெயின் என்பவரால் 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி முறைதான் மசாலா பாங்க்ரா. பஞ்சாபிகளின் பலே பலே நடன அசைவுகளில் சிறுசிறுமாற்றங்களை செய்து மசாலா பாங்க்ராவை உருவாக்கினார். அமெரிக்க உடற்பயிற்சி கவுன்சில் மற்றும் ஏரோபிக்ஸ், பிட்னஸ் அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கா ஆகியவை இந்த
உடற்பயிற்சி
யை அங்கீகரித்துள்ளன. அமெரிக்காவில் டாப் 5 உடற்பயிற்சி முறைகளுள் ஒன்றாக திகழ்கிறது. மசாலா பாங்க்ரா. உலகிலுள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமாகியுள்ளது.

பாங்க்ரா பயிற்சியை 16 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மேற்கொள்ளலாம். இசையை உணர்ந்து அதற்கேற்ப பாங்க்ரா நடன அசைவுகளை மேற்கொள்ளும் போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து எடை குறையும்.

உடல் எடை பாலினம் கட்டுக்கோப்பின அளவு மற்றும் இதர உடற்காரணிகளின் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு 500-700 கலோரிகள் வரை எரிக்கலாம் என்கிறார் பயிற்சியாளர் சரின். இசையில் லயித்து பாங்க்ரா பயிற்சி மேற்கொள்ளும் போது உடலும் மனமும் உற்சாகமடையும்.

இந்த பயிற்சியில் ஏராளமான பலன்கள் கிடைக்கிறது. வாரத்திற்கு 3 முறை 45 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒருமுறை பயிற்சி செய்யும் போது 700 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஒவ்வொரு நடன அசைவிற்கும் தலைமுதல் கால் வரை பயிற்சியில் ஈடுபடுவதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்.

இதையும் படிக்கலாம்...உடலை சீராக்கும் உடற்பயிற்சி
Tags:    

Similar News