செய்திகள்
மீட்கப்பட்ட லோடு ஆட்டோ.

வெள்ளகோவிலில் லோடு ஆட்டோவை திருடியவர் கைது

Published On 2021-09-21 09:33 GMT   |   Update On 2021-09-21 09:33 GMT
புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் தலைமை காவலர் மணிமுத்து ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன வாகனத்தை தேடி வந்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் முத்துக்குமார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 54). இவர் லோடு ஆட்டோவை சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். 19-ந்தேதி காலை வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே ஒரு டீக்கடை முன்பு தனது லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு சாவியை அதிலேயே விட்டுவிட்டு டீ குடிக்க சென்றுவிட்டார். 

திரும்பி வந்து பார்க்கும்போது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் தலைமை காவலர் மணிமுத்து ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன வாகனத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில் முத்தூரில் ஒரு தனியார் பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மினி லோடு ஆட்டோவை மறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த ஆட்டோ காணாமல் போன சுப்பிரமணியத்துக்கு சொந்தமான வாகனம் என்பது தெரியவந்தது.

உடனே ஆட்டோவை கைப்பற்றி அதனை ஓட்டிவந்த கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள மீனாட்சி வலசை சேர்ந்த மகேஷ்குமார் (34) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News