செய்திகள்
ராதாகிருஷ்ணன்

தமிழகத்துக்கு இந்த மாதம் 29 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது- ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2021-08-04 06:17 GMT   |   Update On 2021-08-04 08:14 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கலெக்டர், மாநகராட்சி கமி‌ஷனர் ஆகியோர் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.
சென்னை:

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு இந்த மாதம் 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் 69 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்தது.

தற்போது பல மாவட்டங்களில் அதே நிலையில் தொற்று நீடிக்கிறது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டி உள்ளது.



கொரோனா தொற்று பரவும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதோ அந்தந்த பகுதிகளில் கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமி‌ஷனர் ஆகியோர் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். தொற்று குறையும் பட்சத்தில் தளர்வுகளையும் அளிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News