செய்திகள்
கொரோனாவுக்கு பலி

ராய்காட் மாவட்டத்தில் 2 ஆயிரம் மூத்த குடிமக்கள் கொரோனாவுக்கு பலி

Published On 2021-06-12 02:51 GMT   |   Update On 2021-06-12 02:51 GMT
கொரோனா முதல் அலையில் 20 வயதுக்குட்பட்ட யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் 2-வது அலையின் போது 11 முதல் 20 வயதுக்கு உள்பட்ட 9 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டனர்.
அலிபாக் :

ராய்காட் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி ராய்காட் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 416 பேர் நோயில் இருந்து மீண்டனர். இதில் 3 ஆயிரத்து 267 பேர் இறந்துள்ளனர். தற்போது 6 ஆயிரத்து 386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த கொடிய கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 2 ஆயிரத்து 227 பேர் உயிரை நோய் குடித்துள்ளது.

முதியோர் இறப்பு விகிதம் மாவட்டத்தில் 13.4 ஆக உள்ளது. இதேபோல் 40 முதல் 50 வயதுக்கு உள்பட்ட 22 ஆயிரத்து 602 பேர் கொரோனாவுக்கு ஆளாகி இதில் 255 பேர் இறந்துள்ளனர். முதல் அலையில் 20 வயதுக்குட்பட்ட யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் 2-வது அலையின் போது 11 முதல் 20 வயதுக்கு உள்பட்ட 9 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 10 வயதுக்கு உள்பட்ட 5 ஆயிரத்து 165 குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகின. இதில் 3 குழந்தைகள் மரணத்தை தழுவின.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News