ஆட்டோமொபைல்

இந்தியாவில் கவாசகி நின்ஜா 400 வெளியானது

Published On 2018-04-05 09:58 GMT   |   Update On 2018-04-05 09:58 GMT
கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ மோட்டார் விழாவில் அனைவரையும் கவர்ந்த கவாசகி நின்ஜா 400 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கவாசகி இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் நின்ஜா 400, முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

இந்தியாவில் இயங்கி வரும் கவாசகி விற்பனையாளர்களிடம் புதிய நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் முன்பதிவுக்கு ரூ.50,000 முன்பணம் செலுத்த வேண்டும். இதன் விநியோகம் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நின்ஜா 400 முந்தைய நின்ஜா 300 மாடலை விட 6 கிலோ வரை எடை குறைவாக உள்ளது. 399சிசி பேரலெல் ட்வின் மோட்டார் 45.5 பிஎஸ் மற்றும் 38 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட கணிசமான அளவு அதிகம் ஆகும். இத்துடன் புதிய மாடலில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

நின்ஜா 400 மாடலின் முன்பக்கம் 310 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், நிசின் கேலிப்பர்கள் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை புதிய மாடல் ஃபிளாக்ஷிப் நின்ஜா H2 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் முந்தைய மாடலை விட பெரியதாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது.

786 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கும் சீட் வாகனத்தை ஓட்ட சவுகரியமாக இருக்கிறது. இந்தியாவில் புதிய நின்ஜா 400 மிடில்வெயிட் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலாக இருக்கிறது.
Tags:    

Similar News