செய்திகள்
நவ்ஜோத் சிங் சித்து

டெல்லியில் கட்சி தலைமையை சந்தித்தார் நவ்ஜோத் சிங் சித்து

Published On 2021-10-14 16:33 GMT   |   Update On 2021-10-14 16:33 GMT
பஞ்சாப் மாநில முதல்வர் மாற்றத்திற்கு காரணமாக இருந்ததுடன், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்திருந்தார் நவ்ஜோத் சிங் சித்து.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரிந்தர் சிங் முதல்வராக இருந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இருவருக்கும் இடையில் கடும்மோதல் ஏற்பட்டது.

இதனால் அமரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த சில தினங்களில் நவ்ஜோத் சிங் சித்து அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நவ்ஜோத் சிங் இன்று டெல்லி சென்று அதிகாரிகளை சந்தித்தார். அப்போது ‘‘பஞ்சாப் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் பற்றி எடுத்துக் கூறினேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும், அது காங்கிரஸ் மற்றும் பஞ்சாப் முன்னேற்றத்திற்காக இருக்கும். அவர்களுடைய உத்தரவை பின்பற்றுவேன்’’ என்றார்.
Tags:    

Similar News