ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவ திருநாள் 2-ந் தேதி தொடங்குகிறது

Published On 2019-10-24 06:28 GMT   |   Update On 2019-10-24 06:28 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவ திருநாள் நவம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டு 8-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்ச்சி, ‘டோலோற்சவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஊஞ்சல் உற்சவ திருநாள் நவம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டு 8-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மட்டும் படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை ரெங்கநாச்சியார் சேருகிறார்.

ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் 7 நாட்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற காலங்களில் வழக்கம்போல சேவை நடைபெறும். மேற்கண்ட தகவல், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News