ஆட்டோமொபைல்
யமஹா R3

முற்றிலும் புது டிசைன் - விரைவில் இந்தியா வரும் யமஹா R3 பி.எஸ்.6

Published On 2021-07-29 06:14 GMT   |   Update On 2021-07-29 06:14 GMT
யமஹா நிறுவனத்தின் R3 பி.எஸ்.6 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது.


யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. யமஹாவின் பி.எஸ்.4 மாடல்களில் மிகவும் பிரபலமாக இருந்த YZF-R3 இதுவரை பி.எஸ்.6 அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. 

முன்னதாக புதிய யமஹா மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் RZF-R15 V4 என்றும் கூறப்பட்டது. பின், இந்த மாடலை உற்று நோக்கும் போது இது பெரிய மோட்டார்சைக்கிள் என்றும் இது R3 மாடலின் பி.எஸ்.6 வேரியண்டாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. 



ஸ்பை படங்களில் இந்த மோட்டார்சைக்கிளின் ஹெட்லேம்ப், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட YZF-R7 வேரியண்ட்டில் உள்ளதை போன்றே நடுவில் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் பின்புறம் R3 பி.எஸ்.4 போன்றே காட்சியளிக்கிறது. 

புதிய டிசைன் மட்டுமின்றி பி.எஸ்.6 R3 மாடல் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 6-ஆக்சிஸ் IMU சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. என்ஜினை பொருத்தவரை 2021 R3 மாடலில் 321சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

முந்தைய பி.எஸ்.4 என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் 41 பி.ஹெச்.பி. பவர், 29 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பிரேக்கிங்கிற்கு R3 மாடலின் முன்புறம் 298 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டது.

Tags:    

Similar News