செய்திகள்
மந்திரி சுதாகர்

காரில் டிரைவர் மட்டும் பயணித்தால் முகக்கவசம் அணிய தேவை இல்லை: மந்திரி சுதாகர்

Published On 2020-11-04 01:44 GMT   |   Update On 2020-11-04 01:44 GMT
கர்நாடகத்தில் காரில் டிரைவர் மட்டும் பயணித்தால் முகக்கவசம் அணிய தேவை இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கர்நாடக அரசு கட்டாயமாக்கி உள்ளது. இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட பஸ்களில் செல்கிறவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. காரில் டிரைவர் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை மூடியபடி பயணித்தால், முகக்கவசம் அணிய தேவை இல்லை என்று மத்திய அரசு கூறியது.

ஆனால் பெங்களூரு மாநகராட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரில் டிரைவர் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை மூடியபடி பயணித்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வாகனங்களில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது குறித்து பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காரில் டிரைவர் மட்டும் பயணித்தால் முகக்கவசம் அணிய தேவை இல்லை. அதே நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் யாரும் பயணிக்கவில்லை என்றாலும், வண்டியை ஓட்டுகிறவர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News