செய்திகள்
டாக்டர் பால், தடுப்பூசிகள்

74 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆர்டர்: நிதி ஆயோக் டாக்டர் பால்

Published On 2021-06-08 12:08 GMT   |   Update On 2021-06-08 12:08 GMT
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தற்சமயம் சில மாநிலங்களில் பணி தொய்வடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ‘‘18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். மத்திய அரசே கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்யும்’’ எனத் தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் ‘‘25 கோடி கோவிஷீல்டு டோஸ்கள், 19 கோடி கோவேக்சின் டோஸ்கள், 30 கோடி பயோலாஜிகள் இ-யின் தடுப்பூசி டோஸ்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.


பயோலாஜிகள் இ நிறுவனம் கார்பேவேக் தடுப்பூசியின் விலையை அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். புதிய கொள்கையின்படி நாம் அவர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையும் சார்ந்து அது இருக்கும். வழங்கப்பட்ட நிதி உதவி விலையின் ஒரு பகுதியை சந்திக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News