செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் ஸ்ரீ கன்னியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-10-19 09:09 GMT   |   Update On 2021-10-19 09:09 GMT
நிறைவு நாளன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடுமலை:

உடுமலை அருகே உள்ள அந்தியூர பெருந்தேவித் தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கன்னியம்மன் கோவில் திருவிழா புரட்டாசி மாதத்தை ஓட்டி சிறப்பாக நடைபெற்றது. 

புரட்டாசியில் 5 சனிக்கிழமைகளிலும் பெருமாள் மற்றும் தாயார், கன்னிமார்களுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் பெருமாளுக்கு நடத்தப்பட்டது.

நிறைவு நாளன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. 

திருமண நிகழ்ச்சியில் மாலை மாற்றும் வைபவம் நடனமாடிக் கொண்டே கோலாகலமாக நடத்தப்பட்டது. தேங்காய் உருட்டும் நிகழ்ச்சியும், பூப்பந்து எரியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை ஸ்ரீபதஞ்சலி யோகா கல்லூரியில் நவராத்திரி விழா நடைபெற்றது. கல்லூரி மாணவிகள் அனைவரும் அஷ்டலட்சுமி, சாமுண்டீஸ்வரி, அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வழிபாடு நடத்தினர். 

பரஞ்சோதி யோகா கல்லூரியின் பேராசிரியர் இளமதி தினசரி நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். உமாராணியம்மா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர்கள் குருமாதா பொன்னுச்சாமி, பரஞ்சோதி யோக கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News