செய்திகள்
கோப்புபடம்

வருமுன் காப்போம் சிறப்பு முகாம் - பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள்

Published On 2021-10-16 09:43 GMT   |   Update On 2021-10-16 09:43 GMT
மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் தலா 3 முகாம் வீதம் 39 முகாம் நடத்தப்பட உள்ளது.
திருப்பூர்:
 
உடல்நல குறைபாடு ஏற்பட்ட பின் மருத்துவமனைக்கு சிகிச்சை வருவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதை தவிர்க்கவும் பாதிப்புக்கு முன்பாகவே நோய்களை கண்டறிந்து தடுக்கவும் ‘வருமுன் காப்போம்‘ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் ஆரம்ப கட்ட நோய்களை கண்டறிந்து தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் அக்டோபர், நவம்பர் - மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீர் கோளாறு, பொது மருத்துவம், பன்முனை மருத்துவ பரிசோதனை, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கு ஆலோசனை உள்ளிட்ட சிகிச்சை வழங்கப்பட உள்ளது. 

வருகிற 21, 22, 23, 28, 29 மற்றும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 5, 12, 11, 12, 13, 18, 20, 25, 27, 30-ந்தேதி சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

இது குறித்து சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில்:

மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் தலா 3 முகாம் வீதம் 39 முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில் அனைவருக்கும் உடல் நலம் குறித்த ஆலோசனை வழங்கப்படும். அதிநவீன பரிசோதனை சாதனங்கள் உதவியுடன் நோய் கண்டறியப்பட்டு தேவையான சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். 

தங்கள் வசிக்கும் பகுதிக்கே மருத்துவ குழுவினர் வருகை புரிவதால் உடல் நல குறைபாடு உள்ளவர் பங்கேற்று பயன் பெறலாம். டெங்கு தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்  என்றார்.
Tags:    

Similar News