ஆன்மிகம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு

Published On 2021-11-17 08:58 GMT   |   Update On 2021-11-17 08:58 GMT
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மட்டும் ஆதிபுரீஸ்வரருக்கு மூன்று நாட்கள் கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெறும்.
திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

பிரசித்தி பெற்ற இந்த கோவில் வளாகத்தில் உள்ள ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும், கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மட்டும் ஆதிபுரீஸ்வரருக்கு மூன்று நாட்கள் கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா, நாளை (18-ந் தேதி) மாலை நடக்க உள்ளது. வரும் 20-ந் தேதி வரை காலை 6மணிமுதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.

இந்த நாட்களில் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி பக்தர்கள் தரிசிக்கலாம். 20-ந் தேதி இரவு அர்த்தஜாம பூஜைக்கு பின் ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும். ஆண்டுக்கொரு முறை, மூன்று நாட்கள் மட்டுமே, ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி, தரிசிக்க முடியும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சித்ரா தேவி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News