செய்திகள்
தர்மபுரி உழவர் சந்தை

உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு

Published On 2019-07-21 16:32 GMT   |   Update On 2019-07-21 16:32 GMT
உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தர்மபுரி:

தர்மபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பருவ மழை சரிவர பெய்யாததால், காய்கறிகளின் விவசாயம் குறைந்துள்ளது. எனவே இதைத்தொடர்ந்து வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

தக்காளி ஒரு கிலோ ரூ. 28-க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 24-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 16-க்கும், அவரை ஒரு கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காயை ஒரு கிலோ ரூ. 45-க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 24-க்கும், பூசணிக்காய் விலை ரூ. 24-க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 21-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ. 19-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 68-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 40-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 44-க் கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News