செய்திகள்
முக ஸ்டாலின்.

பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published On 2019-09-10 16:11 GMT   |   Update On 2019-09-10 16:11 GMT
பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.
பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நாளை (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார்.

இதேபோல் மக்கள் விடுதலை கட்சியின் நிறுவன தலைவர் முருகவேல் ராஜன், மாநில செயல் தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் பாண்டி மள்ளர், மாநில அமைப்பு செயலாளர் சரவணன் ஆகியோர் மரியாதை செலுத்துகிறார்கள்.
Tags:    

Similar News