தொழில்நுட்பம்
ஒன் யுஐ 3

ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2020-12-04 11:54 GMT   |   Update On 2020-12-04 11:54 GMT
ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஒன்யுஐ 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு, அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன், அன்றாட அம்சங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

மென்பொருள் அனுபவத்தில் சாம்சங் அதிகப்படியான மாற்றங்களை செய்து இருக்கிறது. இது மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஹோம் ஸ்கிரீன், லாக் ஸ்கிரீன், நோட்டிபிகேஷன், குவிக் பேனல் உள்ளிட்டவை முன்பை விட மேம்படுத்தப்பட்டு தெளிவாக விவரங்களை வழங்குகிறது.



அனிமேஷன் மற்றும் மோஷன் எபெக்ட்கள் மென்மையாக்கப்பட்டு, லாக் ஸ்கிரீன் பேட் அவுட் சுத்தமாக இருக்கிறது. இத்துடன் டாகிள் செய்வது அதிகளவு நேர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. 

சாம்சங்கின் ஒன்யுஐ 3 அப்டேட் இன்று முதல் கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் கேலக்ஸி எஸ்20 சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. சில வாரங்களில் இந்த அப்டேட் மேலும் சில சந்தைகள் மற்றும் கேலக்ஸி நோட் 20, இசட் போல்டு 2, இசட் ப்ளிப், நோட் 10, போல்டு மற்றும் எஸ்10 சீரிஸ் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படலாம்.
Tags:    

Similar News