செய்திகள்
ஆர்என் ரவி

தமிழக புதிய கவர்னர் ரவி இன்று இரவு சென்னை வருகிறார்

Published On 2021-09-16 07:17 GMT   |   Update On 2021-09-16 07:17 GMT
புதிய கவர்னராக ரவீந்திர நாராயண ரவி வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வருகிறார்.
சென்னை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழகத்துக்கு புதிய கவர்னராக ரவீந்திர நாராயண ரவி (வயது69) நியமிக்கப்பட்டார்.

இவர் 1976-ம் ஆண்டின் கேரள பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி 2012-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். அதன்பிறகு 2019-ம் ஆண்டு நாகாலாந்து கவர்னராக அவர் பொறுப்பேற்றார்.

நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையிலும் இவர் முக்கிய பங்கு வகித்தவர். தற்போது ரவீந்திர நாராயண ரவி அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கவர்னராக ரவீந்திர நாராயண ரவி வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத் தில் இருந்து கார் மூலம் அவர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல் கிறார்.

கவர்னர் மாளிகையில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. ரவீந்திர நாராயண ரவிக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கவர்னராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags:    

Similar News