தொழில்நுட்பம்
கூகுள்

கூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் க்ரூப் கால் வசதி அறிமுகம்

Published On 2020-06-27 11:43 GMT   |   Update On 2020-06-27 11:51 GMT
கூகுள் நிறுவனம் தனது கூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் க்ரூப் கால் செய்வதற்கான வசதியினை வழங்கி உள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் துவங்கியது முதல் க்ரூப் காலிங் வசதி கொண்ட செயலிகள் எண்ணிக்கையும், க்ரூப் கால் செயலிகளின் அம்சங்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது டுயோ, மீட் மற்றும் நெஸ்ட் ஹப் மேக்ஸ் உள்ளிட்ட சேவைகளில் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சேவைகளில் ஒரே சமயத்தில் ஒருவருடன் மட்டுமே வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும்.

நெஸ்ட் ஹப் மேக்ஸ் சாதனத்தில் கூகுள் டுயோ கொண்டு வீடியோ கால் மேற்கொள்வோர் முதலில் கூகுள் டுயோ மொபைல் செயலியில் க்ரூப் ஒன்றை உருவாக்கி அதில் நபர்களை சேர்க்க வேண்டும். இதன் ஹப் மேக்சிடம், “Hey Google, make a group call” என கூறினால், சாதனம் தானாக க்ரூப் கால் மேற்கொள்ள துவங்கும்.

கூகுள் டுயோ க்ரூப் கால் அம்சம் எல்ஜி எக்ஸ்பூம் ஏஐ தின்க் டபிள்யூகே9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஜெபிஎள் லின்க் வியூ மற்றும் லெனோவோ 8 இன்ச் மற்றும் 10 இன்ச் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களிலும் பயன்படுத்த முடியும். 
Tags:    

Similar News